ஓசூர் மலைப்பகுதிகளில் ‘தண்டகாரண்யம்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின்  இயக்குனர் அதியன் ஆதிரை  இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில்  வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன்,   உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல்கட்டமாக ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.