சிலம்பத்தை பற்றிய உண்மை சம்பவம் படமாகிறது!

விளையாட்டுத் துறையில் திறமையானவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறித்து  திறமையில்லாதவர்களை புகுத்தி ஒரு கும்பல் ஆட்டிவைப்பது நமக்கு  தெரிந்ததுதான். இவர்களை எதிர்த்து விளையாட்டுத் துறையில் சாதிப்பது திறமைசாலிகளுக்கு குதிரை கொம்பாக இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலை சிலம்ப விளையாட்டிலும்  அந்த கும்பல் நுழைந்துள்ளதை எதிர்த்து வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த அந்த இளைஞன் சிலம்பத்தை முறையாக கற்றுக்கொண்டு பணபலம், அதிகார பலத்தை எதிர்த்து சிலம்ப விளையாட்டில் மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி தங்கப்பதக்கங்களை அள்ளுகிறான்.அந்த இளைஞனின் விடாமுயற்சியை படத்தின் மையக்கருவாக வைத்து, உண்மை சம்பவங்களை திரைக்கதையாக்கி ‘லார்டு கணேஷ் கிரியேஷன்ஸ்’ சார்பில் பி.கே.எஸ்.  வழங்க திருமதி.எஸ்.லதா தயாரிப்பில் உருவாகும் படம்தான் “சிலம்பம் ‘.

இதில் புதுமுகங்கள் மாஸ்டர் எம்.எஸ்.சஷாந்த், ஜெ. அஜீத், மாஸ்டர் அரிமா வர்மன்,  பவித்ரா,  மற்றும் மொட்டை ராஜேந்திரன், தீனா, மகாநதி சங்கர், முத்துக்காளை, வெங்கல்ராவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கி, இடைவிடாமல் நடைபெற இருக்கும் படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, ஷ்யாம்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, கே.என்.செந்தில் படத்தொகுப்பையும், தாடி கோவிந்தராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

லார்டு கணேஷ் கிரியேஷன்ஸ்   நிறுவனம் சார்பில் பி.கே.எஸ்.வழங்க “சிலம்பம்” படத்தை திருமதி.எஸ்.லதா  தயாரிக்கிறார்

பல வெற்றிப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற டாக்டர். ஏ.கே.எஸ்.ஜோதி ” இதன் திரைக்கதை வசனம் எழுதி , சண்டைப் பயிற்சி அளித்து,  ” சிலம்பம்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

Leave A Reply

Your email address will not be published.