பாவெல் நவகீதன் இயக்கிய இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படம் “V1”.

பல குறும்படங்களை இயக்கி விருதுகளை பெற்றவரும், வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவருமான பாவெல் நவகீதன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படம் “V1”.

விரைவில் வெளியாகவுள்ள “V1”. படம் குறித்து இயக்குனர் பாவெல் நவகீதன் கூறியதாவது…

‘ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் இப்படி பலருக்கு பலவகையான பயம் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு பயம்.
கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண் கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “V1” படத்தின்கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளேன் என்கிறார் பாவெல் நவகீதன்.

‘பேரடைம் பிக்சர் ஹவுஸ்’ மற்றும் ‘கலர்புல் பீட்டா முவ்மண்ட்’ ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடுகிறார். இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார்.

Comments are closed.