வடிவேலு நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்க நடிகர் வடிவேலு நடிக்கும் படத்திற்கு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருவதால் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.