மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் ‘ஆஹா’வும், விஜய் சேதுபதியும்!

தமிழில் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும். இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார்.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ‘இரை’, ஆகாஷ்வாணி’, ‘அம்முச்சி 2’,‘குத்துக்கு பத்து’,‘ஆன்யா‘ஸ் டுடோரியல்’ஆகிய வலைத்தளத் தொடர்களுடன், விரைவில் ‘ஈமோஜி’ எனும் புதிய வலைத்தளத் தொடரும் வெளியாகிறது. ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘போத்தனூர் தபால் நிலையம்’ போன்ற ஆஹா ஒரிஜினல்ஸ் படைப்புகளும், சபாபதி, செல்ஃபி, ரைட்டர், மன்மத லீலை, ‘ஐங்கரன்’, ‘கூகுள் குட்டப்பா’, ‘கதிர்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல  திரைப்படங்களும் ஆஹாவில் வெளியாகியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.