விமல் நடித்த படங்கள் வெளியிட தடை!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான  ‘மன்னர் வகையறா’ படத்தை, நடிகர் விமல் தயாரித்து, நடித்திருந்தார். இந்த படத்திற்காக ‘அரசு பிலிம்ஸ்’ உரிமையாளர் கோபி என்பவர் 5,35,00,000 ரூபாய் நிதி உதவி செய்திருந்தார்.

விமல் இந்த தொகையை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலிருந்தும் கோபிக்கு தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் முதல் தவனையாக 1,35,00,000 திருப்பிக் கொடுத்த நிலையில் பாக்கித்தொகையை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக ‘அரசு ஃபிலிம்ஸ்’ நிறுவனம் விமலை வைத்து படமெடுத்து வரும் 7 தயாரிப்பாளர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது அதில், ‘விமல் பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் நடிப்பில் வரும் படங்கள் வெளிவர கோர்ட்டு தடை ஆனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடித நகல்

Comments are closed.