கார்த்திக் நடிக்கும் ‘ விருமன்’  படப்பிடிப்பு முடிவடைந்தது!

நடிகர் சூரியாவின் ‘2D Entertainment’ நிறுவனம், தயாரித்த  கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி  நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்தது.

விருமன் படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது…

‘மதுரை சுற்று வட்டாரத்தில் சிறப்பான திட்டமிடலால் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் 60 நாள்கள் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள் . என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2D நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி! “ என்றார்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.