விரைவில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் !

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.  இப்படத்தின் படப்பிடிப்பு , டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, ரிலீஸுக்கான  இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளை,  தயாரிப்பு தரப்பு வெளியிடவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.