நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் படங்களை குவிக்கும் சமந்தா!

சமந்தா – நாகசைதன்யா, பிரிவு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தா புதிய படங்களுக்கான ஒப்பந்தகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில் இரண்டு படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படங்களில் ஒன்றினை தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு  தயாரிக்க,  அறிமுக இயக்குனர் சாந்த ரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.

மற்றொரு படத்தினை, ஜெயம் ரவி நடித்த  ‘மழை’ படத்தினை தயாரித்த சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்குகின்றனர்.

நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது என கூறும் தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத், மேலும் கூறியபோது..

‘சமந்தாவை இந்த படத்தில் ஒரு புது அவதாரத்தில் காண  நாங்கள் மிகுந்த ஆவலாக உள்ளோம். இந்த படத்தின் கதை தனித்துவமானது.

இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன்  இந்த கதையை என்னிடம் கூறியபோது, நான் மிகுந்த  ஆச்சர்யத்திற்கு உள்ளானேன்.  அவர்கள் கதை சொன்ன விதமும், அதை உருவாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது. அவர்களுக்கு’ கிரியேட்டிவ்’ முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது.

சமந்தா இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும்  என நான் நம்பினேன். இயக்குநர்களும் அதை தான் நினைத்தார்கள். கதையை சமந்தாவிடம் கூறியபோது, உடனே ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது.  மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளோம், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.