சி வி குமார் தயாரிக்கும், புதிய படம் ஹைனா!

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிக்கும், ‘ஹைனா’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

‘ஹைனா’ திரைப்படத்தினை சமத்துவ மக்கள் கழக இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் குத்துவிளக்கேற்றி, கிளாப் அடித்து துவக்கி வைக்க, வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் விஸ்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குழுவினரை வாழ்த்தினார்.

ஹைனா ( கழுதைப்புலி ) பெயருக்கேற்றார் போல் போல் திடீர் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரில்லர் படமாக அமையவுள்ளதாம்.

ஹைனா படத்தை பற்றி இயக்குநர் பிரஷாந்த் சந்தர் கூறுகையில்,

“இது முழுக்க முழுக்க ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் மூலக்கதை மாயையை மையப்படுத்தி இருக்கும். எனது குருநாதரின் தயாரிப்பிலேயே முதல் படத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது தசாப்தத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்,” என்று பிரஷாந்த் சந்தர் கூறினார்.

பிரஷாந்த் சந்தர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி வி குமாரிடம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் இணை இயக்குநராக பிரஷாந்த் சந்தர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.