விஷ்ணுவர்தன்  தயாரிப்பில், அக்ஷரா ஹாசன் நடிப்பில், ‘ஃபிங்கர்டிப்’

திரில்லர்இணையத்தொடர்ஆகஸ்ட் 21ல்ZEE5ல்வெளியீடு*  சமூகவலைதளத்தின் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக்கொண்ட இந்த தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21ம்தேதி இணையத்தில் வெளியிடப்படுகிறது.

இந்தியாவின் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTT) தளமான ZEE 5 ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான திரவம், ஆட்டோசங்கர் ஆகியவற்றை தொடர்ந்து, மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் ‘ஃபிங்கர்டிப்’ எனும் திரில்லர் தொடர் வருகின்ற 21ம்தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணுவர்தன் தயாரிப்பில், சிவாகர் இயக்கத்தில், 5 எபிசொடுகளைக் கொண்ட இந்த சமூக ஊடக திரில்லர் தொடரில், அக்ஷராஹாசன், அஷ்வின்காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதன்ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் பிரத்யேகமாக ZEE 5 தளத்தில் வெளியாகிறது.

‘ஃபிங்கர்டிப்’ எனும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலைதள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடக்கூடும் என்பதையும், அவர்களது சௌகரியங்களை விட்டு நகர்த்தி, ஒரு தாள முடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும், மிகவும் தெளிவாக எடுத்துகாட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு ஆப்புடன் ஒப்பிடக் கூடியவகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ஆப்பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அக்ஷராஹாசன்பேசும்போது, ‘பலதரமான அசலான தமிழ் படைப்புகளை உருவாக்கிவரும் ZEE 5 உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நடிக்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்.’

இத்தொடரின் இயக்குனர் சிவாகர், ‘அசலான, புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்இந்த காலச்சூழலில், அதன் முன்னோடியாக திகழும் ZEE 5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பரபரப்பான திரில்லர் தொடரான ‘ஃபிங்கர்டிப்’, உங்களை வெகுவாக ஈர்க்கும், யோசிக்க வைக்கும், அதேசமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்”   என்றார்.