நீரிழிவு நோயாளிகளுக்கு ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் மூலம் சிறப்பான சிகிச்சை!

ட்விட் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி குழு டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாள்பட்ட நோய்களை சரிசெய்வதற்கான உலகின் முதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை (RCT) மேற்கொள்கிறது. அந்த RCT டேட்டாவானது அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் (American Diabetes Association) நீரிழிவு நோய்க்கான இதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக, நீரழிவு நோய்க்கான அளவீடானது HbA1c என்பதால் குறிப்பிடப்படும். இந்த அளவீடானது ட்வின் சிகிச்சையின் மூலம் சராசரியாக 3.1 புள்ளிகள் குறைந்து (8.7-லிருந்து), நோயாளிகள் நீரழிவு நோயிலிருந்து மீண்டுள்ளனர். 92% பேர் அனைத்து நீரிழிவு மருந்துகளையும் கைவிட்டுள்ளனர். அதோடு, ஒவ்வொரு நோயாளிகளின் சராசரி எடை குறைப்பு 9.1 கிலோ ஆகும்.

பத்ம ஸ்ரீ பேராசிரியர் சஷாங்க் ஜோஷி, ட்வின் ஹெல்த் நிறுவன தலைமை விஞ்ஞானி, ஆலோசகர் மற்றும் இந்திய நீரிழிவு அகாடமியின் தலைவர் பேசும்போது, “ஒரு விஞ்ஞானியாக, தற்போதைய RCT முடிவுகள் மற்றும் முழு உடல் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். இதன்மூலம் டைப் 2 நீரழிவு நோயை சரிசெய்ய முடியும் என்பது அறிவியல் மூலமாக நிரூபணமாகியுள்ளது.” என்றார்.

ட்வின் ஹெல்த் ஆராய்ச்சிக்காக ஐஐடி மெட்ராஸுடன் (IIT Madras) கூட்டணியை அமைத்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் நிறுவனர் பத்மஸ்ரீ பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசும்போது, “ உலகின் நீரிழிவு நோயின் தலை நகரம் இந்தியா. இன்சுலின் போன்ற மருந்துகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும்,  நோயாளியை முழுமையாக குணமாக்காது. இந்த மருந்துகள் பல ஆண்டுகளாக உடல்நிலையை மேசமடைய வைக்கிறது. நீரிழிவு நோயை சரிசெய்ய புதிய தொழில் நுட்பத்துடன் ட்வின் ஹெல்த் கைகொடுக்கும். சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விரிவான டேட்டா மூலம், ஒவ்வொரு நபரும் ஒருவரின் உடலைக் கவனமாகக் கண்காணிக்கலாம். அவர்களது ஆராய்ச்சியின் முடிவானது, மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றது.” என்று கூறினார்.

சீரிஸ்-சி நிதி திரட்டலில் (Series-C funding), செக்கோயா கேபிடல் இந்தியா (Sequoia Capital), ஐகோனிக் (ICONIQ), பெர்செப்ட்விட் அட்வைஸர், கார்னர் வென்ச்சர்ஸ், எல்டிஎஸ் இன்வெஸ்மெண்ட்ஸ், ஹெலீனா மற்றும் சோஃபினா ஆகிய முதலீட்டாளர்கள் இடம்பெற்றனர். “உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற இலக்குமிக்க நிறுவனர்கள் தேவை. ட்வின் ஹெல்த் ஆனது சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. ஜஹாங்கீரின் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவிற்கும் உலகத்திற்கும் ஒரு புதிய சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பினை பரிசாகத் தந்திருக்கிறது” என்று கூறினார்.

செக்கோயா இந்தியாவின் நிர்வாக தலைவர் மோகித் பட்னாகர். ட்வின் ஹெல்த் பற்றி நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், ஆற்றல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆயுட்காலம் நீட்டிக்கவும், ட்வின் ஹெல்த் முழு உடல் டிஜிட்டல் ட்வின் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் இந்தியாவின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. மேலும் அறிய, https://www.twinhealth.com ஐப் பார்வையிடவும்.

Leave A Reply

Your email address will not be published.