மதுரை தொழிலதிபர், மஸ்கட்ராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

சென்னையில் இன்று சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் நடைபெற்ற மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில் தொழிலதிபரும், சமூக சேவகருமான மஸ்கட் ராஜா அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ஹரிஷ் மற்றும் கலாம் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் டாக்டர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பட்டத்தை வழங்கினர். பட்டமளிப்பு விழாவில் தொழிலதிபர் மதுரை VRG பழனிக்குமார், மக்கள் வலிமை பத்திரிகையின் ஆசிரியர் முனைவர் செந்திலிங்கம் மற்றும் மஸ்கட் ராஜா உதவியாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.