மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. எனினும் கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம்.  சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது. தொடர்ந்து கண்கானிப்பில் இருந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.  அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.