கடலில் மூழ்கும் இந்திய நகரங்கள்! – நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

உலகில் நிகழ்ந்துவரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக காலநிலையில் அதிர்ச்சி தரும் மாற்றங்கள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஐ.நா., நிறுவனம் வெளியிட்டுள்ள ஐ.பி.சி.சி., அறிக்கையில் கூறியிருப்பதாவது…

‘சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். மேலும்  புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உருகி, கடல்நீர் மட்டம் உயரும்.

கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த விபரங்களில் குறிப்பாக, ‘2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் கடலுக்கடியில் 2.7 மீட்டர் அளவு ஆழத்தில் மூழ்கும்.

இதில், குஜராத், ஒடிசா, கல்கத்தா, மகாராஷ்டிரா,கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் நகரங்கள் உள்ளன.

குறிப்பாக சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட உலகின் வேறுபகுதிகளில் உள்ள நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம்’ என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.