Connect with us

Cinema News

Kaappaan Movie Review

Published

on

Kaappaan Movie Review

‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு சூர்யாவும் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் படம் ‘காப்பான்’.

கே.வி. ஆனந்தின் கதைக்கு பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து இருவரும் திரைக்கதை அமைத்துள்ளனர் எப்படி இருக்கிறது இவர்களது கூட்டணியில் உருவான ‘காப்பான்’

இயற்கை வளம் கொழிக்கும் டெல்ட்டா பகுதிகளில் ‘தோரியம்’ ( அணு உலைகளில் அணுக்கரு எரிபொருளாக ‘தோரியம்’ பயன்படுத்துகிறது ) எனும் தனிமம் உள்ளிட்ட பல கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதை அபகரிக்க இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் ஒரு பூச்சியினத்தை உருவாக்கி விளை நிலங்களை நாசப்படுத்த திட்டமிடுகிறார். இந்த படுபாதக செயலைக்கண்டிக்கும் பிரதமர் மோகன்லாலை வெடிகுண்டு வைத்து கொல்கிறார்.

மோகன்லாலின் மறைவுக்கு பிறகு ஆர்யா பதவிக்கு வர.. அவரையும் கொலை செய்ய திட்டமிடப்படுகிறது. பிரதமரின் தனி தலைமை பாதுகாவலர் சூர்யா அதை முறியடித்தாரா..? என்பது தான் ‘காப்பான்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

ஹெலிகாப்டரிலிருந்து குதிக்கும் சூர்யா சரக்கு ரயிலை வெடிவைத்து தகற்கும் முதல் காட்சியிலிருந்து படம் முடியும்வரை பல காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடக்கும் வெடிகுண்டு வெடிப்பு பரபரப்பின் உச்சம்.

கே.வி. ஆனந்தின் வழக்கமான சமூக அக்கறை மற்றும் அரசியல்வாதிகளின் அலுச்சாட்டியங்களை அழகாக காட்டியிருக்கிறார். இயற்கை விவசாயத்தின் அவசியம் பேசும் அவர் விளை நிலங்களை அபகரிக்க நடக்கும் சதிகளை சொல்லும்போது பகீரென இருக்கிறது. தஞ்சை மாவட்ட பகுதி பாதுகாக்கப்பட்டு அங்கு விவசாயம் தவிர வேறு எதுவும் நடக்கக்கூடாது என உத்தரவிடும் பிரதமர் ஆர்யாவின் பேச்சு நிஜமாக வேண்டும் என ஏக்கம் வருகிறது.

இயற்கை விவசாயியாகவும், எஸ்.பி.ஜி கமென்டோவாகவும் கலகலக்க வைக்கிறார். அவரது மிடுக்கான பார்வையும், செயலும் ஒரு நேர்மையான கமென்டோவை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. ரசிகர்களை கவர்கிறார்.

கே.வி.ஆனந்தின் வழக்கமான ரொமென்ஸ் காட்சிகள் மிஸ்…ஸிங்!.  சாயிஷா, சூர்யா இடையில் காதல் காட்சிகள் இன்னும் இருந்திருக்கலாம். சாயீஷாவை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். மோகன்லால் கம்பீரம்! பிரதமராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலி, அம்மா இருவருக்குமிடையே அன்பைச்சொல்லி தாய் நாட்டின் பெருமை பேசுமிடத்தில் அவர் கைதட்டல்கள் பெறுகிறார்.

விளையாட்டுப் பிள்ளையாக நடித்திருக்கும் ஆர்யா அசத்தல்!

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அழகான புது லொகேஷன்களில் பாடல் காட்சிகளை கொடுக்கும் கே.வி.ஆனந்த் இந்தப்படத்தில் படம் முடிந்தவுடன் ஸ்க்ரோல் டைட்டில் கார்டில் போட்டு ஏமாற்றியிருக்கிறார்.

படத்தில் ஆக மோசம் ஹாரிஸ் ஜெயராஜ்! பாடல்களும் சரியில்லை…பின்னணி இசையும் சரியில்லை.. ‘ரோஜா’ படத்தில் வரும் பிஜிஎம் சில இடங்களில் வருகிறது

படத்தின் நீளம் சற்று சோர்வை தருகிறது அதை தவிர்த்திருக்கலாம். எடிட்டர் ஆண்டனி ஒகே!

பரபரப்பான ஆக்‌ஷன் படத்தில் ஒரு அருமையான சோஷியல் மெஸேஜை சொல்லியிருக்கும் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி வெற்றிக் கூட்டணி.

Cinema News

ரோபோட்ஸ்களுடன் சண்டை போட்ட நடிகர் ‘ஜெய்’

Published

on

By

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ்,  ஆகியோர் நடிக்கின்றனர்.

அதிக கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர்  ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை  மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர். சமீபத்தில்  நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க,  இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading

Cinema News

திரைப்பட விமர்சகர்கள், ரசிகர்கள் மனதை வென்ற ZEE5 யின் ‘விநோதய சித்தம்’ 

Published

on

By

Vinodhaya Sitham

ZEE5 ஓடிடி நிறுவனம் தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக  ZEE5 மாறியுள்ளது.

ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண:

https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673

பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர்  சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India  கூறியதாவது.

‘தரமான படங்களை தருவதே எங்கள்  ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு  அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம்   போன்ற எங்களது தளத்தில்  தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை   ரசிகர்கள்  விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான  கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்’.

சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,

‘எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில்  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன’.

நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது…

‘சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி’.

தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது

படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான,  ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் ‘விநோதய சித்தம்’  திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.

நீங்கள் முழுத்திரைப்படத்தை இந்த சுட்டியில் காணலாம்

: https://www.ZEE5.com/movies/details/vinodhaya-sitham/0-0-1z519672

Continue Reading

Cinema News

பரப்பரப்பை கிளப்பிய விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ போஸ்டர்!

Published

on

By

‘களவு’ என்ற படத்தினை தொடர்ந்து, இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கிவரும் படம், ‘மோகன்தாஸ்’. இந்தப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷாலின் பட நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ தயாரித்து வருகிறது.

விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கோடையில் ‘மோகன் தாஸ்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் விஷ்ணு விஷால் வில்லத்தனமான  சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த சுத்தியலுடன் மாகத்மா காந்தி காட்டிய கண்,காது,வாய் மூடியிருக்கும் மூன்று குரங்கு பொம்மைகளுடன் நாலாவதாக ஒரு குரங்கும் நூலால் கட்டப்பட்டுள்ளது. இதில் நான்காவது குரங்கு வீழ்த்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்தக்காட்சி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.