‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமலின் 3 நிமிடங்கள்!

Kamal Haasan lends his voice for Chiranjeevi’s Sye Raa Narasimha Reddy

‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘கன்னடம்’, ‘மலையாளம்’, ‘ஹிந்தி’ என அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி’.

பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இப்படம் தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் வரும் அக்டோபர் 2, ஆம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி”படத்தினை தமிழில் வெளியிடுகிறது.

“சைரா நரசிம்ம ரெட்டி”வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் R B சௌத்திரி  பேசியதாவது….

‘மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட ராணா தமிழக முன்னணி நாயகன் விஜய்சேதுபதி,  நயன்தாரா என பலர் நடித்த இந்தப் படத்தை கடந்த வாரம் பார்த்தேன்.

தமிழில் நான் தான் ரிலீஸ் செய்வேன் என அடம்பிடித்து வாங்கியுள்ளேன். தெலுங்கில் போல தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.

Sye Raa Interview – Chiranjeevi, Amitabh Bachchan | Farhan Akhtar

இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தினை பிரமாண்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் மட்டுமே சௌத்திரி சார் இந்தப்படத்தை வாங்கியிருப்பார் என்றால் கிடையாது. அதைத் தாண்டிய கதை இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார்.

தமிழில் 40 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். அவர் கை வைத்தால் அது வெற்றி தான். நான் இணையத்தில் ராம்சரண் பாடல்களை பார்ப்பேன் ஹீரோயினாக யார் இருந்தாலும் இவர் மீது தான் கண் போகும். அவர் தமிழுக்கு வந்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியதாவது..

எல்லாருடைய அன்புக்கும் நன்றி…’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி  சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி.

நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். 96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம்.

நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம். தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள் ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார் அப்போதிலிருந்து உருவான படம் இது.

கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி.

10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய  படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார். கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி.

இந்த வாரம் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள், கொண்டாடுங்கள் என்றார்.

சிரஞ்சீவி பேசியபோது….

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி.

“சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு. பட்ஜெட் பெரிதாக இருந்ததால் முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின்  சினிமாவுக்கு வந்த பிறகு தமிழில் வந்த  “கத்தி”  படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து.. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார்.

நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி.

இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து  மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். பருச்சூரி சகோதரர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். நடிகர் ராம் சரண் ‘Konidela Production’ கம்பெனி  சார்பில் தயாரித்துள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Comments are closed.