*சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்ற  “கருத்துகளை பதிவு செய்”* படம்

Karuthukalai pathivu sei is an upcoming Woman awareness Tamil Thriller film

டிஜிட்டல் நவீன உலகின் நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில்  ‘ஃபேஸ்புக்’ காதலை முன்வைத்து ஒரு படம் உருவாகி இருக்கிறது.

‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ராகுல் பரஹம்சா இயக்கியிருக்கிறார்.  ‘ஆர்.பி.எச்’  சினிமாஸ் சார்பில் மும்தாஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு JSK கோபி.

சமீபத்தில் சென்சாருக்கு சென்ற ‘கருத்துகளை பதிவு செய்’படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து ‘கருத்துகளை பதிவு செய்’படத்தின் இயக்குனர் கூறியதாவது..

கடந்த வாரம் “கருத்துகளை பதிவு செய்” என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் தான் கதை,

அப்படி சமூக வலைதளங்களில் விரிக்கப்பட்ட வலையில் மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்தப்படத்தின் திரைக்கதை.

“கருத்துகளை பதிவு செய்”  படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம்மாதிரியான படங்கள் இந்த கால ‘4G’ தலைமுறைக்கு அவசியம் என பாராட்டினார்.

இந்தமாதிரியான படங்களை பார்த்தாவது அப்பாவி பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறி வாழ்த்து தெரிவித்தாதாக படத்தின் இயக்குனர்  ராகுல் பரஹம்சா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது.  “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது

 

 

Comments are closed.