மார்கழியில் ‘மக்களிசை’ டிசம்பர் 18 ஆம் தேதி  மதுரையில் துவங்குகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும்  நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி  இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இசைக்கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் , நடனக்கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 18, மதுரையிலும், டிசம்பர் 19 கோவையிலும்  டிசம்பர் 24 முதல் 31 வரை சென்னையிலும் நடைபெறுகிறது.

உலகப் பொதுமறை கண்ட தமிழ் நிலத்தின் வரலாற்றில் , கலைகளும் பண்பாட்டு வடிவங்களும் ஆற்றிய பங்கினை எவராலும் மறக்கவோ மறைக்கவோ இயலாது. ஒவ்வொரு நிலத்தின் சிறப்பையும், வளங்களையும், குடிகளின் வாழ்வையும் அந்நிலத்தின் பாடல்களே நமக்கு விவரித்திருக்கின்றன.

இயற்கையை வணங்கி எல்லா உயிர்களும் சமம் என்ற மனங்கொண்டு , ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடி வாழ்ந்த சமத்துவ சமூகம் நம் தமிழ்ச்சமூகமே என்கிற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்வதே மக்கள் கலைகளின் பெருமைமிகு மாண்பாக உள்ளது.  கலைகளை வளர்த்தலும் பண்பாட்டு வேர்களை மீட்டெடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நம்மை ஒன்றுசேர்க்கும் என்ற சமத்துவ நோக்கமே.. நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்வுக்கான அடிப்படை.

கொண்டாடுவோம் மார்கழியில் மக்களிசையை.

Leave A Reply

Your email address will not be published.