நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்.

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 48 . வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் அவருடைய நுரையீரலில் பாதிப்பு  ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வித்யாசாகரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமுமின்றி  மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா விஜய்யுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.