சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பனை பயத்தை போக்க வேண்டும் – பிரதமர் மோடி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி அநேக இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 303 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று தனி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க முன்னெடுத்தது. இதற்காக டெல்லியில் சனிக்கிழமை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அடங்கிய கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்கு அளிக்காதவர்களையும் சேர்த்துக் கொண்டே முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களை வாக்கு வங்கி அரசியலுக்கு பயண்படுத்தி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணத்தை போக்க வேண்டும். நம்மை தேர்ந்தெடுத்த மக்களை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. நடந்து முடிந்த தேர்தல் பிரிவினையை தகர்த்துள்ளது. மேலும் மக்களுடன் ஒன்று கலந்து பழகும் படி வலியுறுத்திப் பேசினார்.