Connect with us

Cinema News

நேர்கொண்ட பார்வை – விமர்சனம்

Published

on

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் அனைவரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ‘பிங்க்’ ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளதால் இந்தியா முழுவதிலும் தனிகவனத்தை பெற்றுள்ளது. ‘பிங்க்’ படத்தின் தரமான வெற்றியை இப்படம் தக்க வைத்துக்கொள்ளுமா?
.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்டிரியா தாரியங் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து அவரவர் வேலையைச் செய்து வரும் தோழிகள். ஓரு நாள் இரவு ஷ்ரத்தா ஸ்ரீநாத் பங்கு பெறும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு அனைவரும் செல்கின்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஏற்கனவே பழக்கமான அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ் கொடுக்கும் மது விருந்தில் கலந்து கொள்கின்றனர். அங்கு ஏற்படும் சம்பவத்தில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தால் கடுமையாக தாக்கப்படுகிறார்.

பணபலமிக்க அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ் ஆகியோர் இதற்கு பழிவாங்கும் விதமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்டிரியா தாரியங் ஆகிய மூவரையும் பாலியல் உள்ளிட்ட பல துன்பங்களுக்கு உட்படுத்தி கோர்ட் மூலம் அவர்களை விபச்சாரிகளாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் இந்த கோரப்பிடியிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் கதை!

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ரீமேக் செய்யும் போது அந்தந்த மொழிக்கேற்ப மற்றங்கள் செய்வது வழக்கம். ஒரு சில மாற்றங்களைத் தவிர இந்தப்படத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் ‘பிங்க்’ படத்தில் இடம் பெற்ற டைலாக்குகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்படத்தை பார்த்தவர்களுக்கு சற்று சலிப்பு ஏற்படும். இருந்தாலும் படத்தின் வலிமையே அது தான்.

அஜித்குமார் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட சண்டைக்காட்சி சூப்பர் மாஸ்! இந்த ஒரு காட்சியே அவர்களுக்கு போதும். வழக்கமான வழ வழ கொழ கொழ இல்லாத ஃபைட் நச்சுன்னு இருக்கு.

பாடல் காட்சியில் ஆரம்பிக்கும் படம் இருபது நிமிடம் ஸ்லோவாக போகும் போது தியேட்டரில் ‘படம் அவ்வளவு தானா ?’ என்ற முனுமுனுப்புக்கள். ஆனால் அஜித் எண்ட்ரிக்கு பிறகு க்ளைமாக்ஸ் வரை அஜித்தின் அதகளம்! சிங்கத்தின் முன் சிறு நரியாக பத்திரிகையாளர் ரங்கராஜ் பான்டே! அஜித்தின் ஆக்ஷனுக்கு முன் அவரது ரியாக்ஷன் எடுபட மறுக்கிறது. ஓவராக்டிங்கோ!

க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித் கோர்ட்டில் ‘NO’ சொல்லும் காட்சியையும் வசனத்தையும் படம் பார்த்தே அனுபவிக்க முடியும். வேற லெவெல் மாஸ் பண்பட்ட நடிப்பில் மிளிர்கிறார்!

யுவன் ஷங்கர் ராஜாவை போங்கடிக்க விடாமல் வேலை வாங்கியிருப்பார் போல இயக்குனர் எச்.வினோத். சூப்பர் பிஜிஎம். நீரவ் ஷாவின் கேமிராவும், கோகுல் சந்திரனின் எடிட்டிங்கும் படத்தின் பலமாக இருக்கிறது. மற்ற டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் அஜித்தின் ஆளுமையால் கவனிக்க முடியாமல் போகிறது.

விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை தொடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் அதில் சம்பந்த படாதவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.

‘பிங்க்’ படத்தின் தரமான வெற்றியை போல் ‘நேர்கொண்ட பார்வை’ படமும் தரமான வெற்றியைப் பெற்றுள்ளது.

Cinema News

‘பேச்சிலர்’ ஆண், பெண் உறவை பேசும் படமாக இருக்கும். – GV பிரகாஷ் குமார்.

Published

on

By

GV பிரகாஷ் குமார், திவ்யபாரதி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பேச்சிலர்’ . அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் எழுதி; இயக்கியுள்ள இப்படத்தை, Axess Film Factory சார்பில்  G.டில்லி பாபு தயாரித்துள்ளார்.

‘பேச்சிலர்’  டிரெய்லர் வெளியானபோதே, பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 3  ஆம் தேதி வெளியாகுகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது…

3 வருடத்துக்கு முன்னாடி டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம், தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து,  இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி. தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார். ஒரு காட்சி ஒகே டேக்கே 40 டேக் போகும், அதை அவ்வளவு பொறுமையாக பார்த்து, கிரியேட்டிவாக எடிட் செய்துள்ளார் ஷான். அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு நண்பனாக அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஜீவி சார்,  ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம்,  இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்ன, சின்ன உணர்வும் படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும். படம் இத்தனை இயல்பாக இருக்க அவர் தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள் அனைவருக்கும் நன்றி. திவ்யா 3 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்தார். இந்தப்படம் அவர் வாழக்கையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு அறிமுக நடிகையாக அற்புதமாக நடித்திருக்கிறார். சித்துவை தான் அதிகமாக டார்ச்சர் செய்திருக்கிறேன் அதையெல்லாம் பொறுத்துகொண்டு சிறப்பான பின்னணி இசை தந்திருக்கிறார். அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்து, அழகாக உருவாக்கியுள்ளோம்,  உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி, என்றார்.

நடிகர் GV பிரகாஷ் குமார் கூறியதாவது…

இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன். டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார்.  ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார் ஆனால் பராவாயில்லை அருமையான மியூசிக் தந்திருக்கிறார். இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம் அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

 

Continue Reading

Cinema News

விக்னேஷ் சிவனின் ‘கனெக்ட்’ படத்தில் நடிக்கும் அனுபம் கெர்!

Published

on

By

பாலிவுட் நடிகர் அனுபம் கெர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கனெக்ட்’, என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தினை விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்ச்சர்’ஸ் தயாரிக்கிறது. மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இது குறித்து ‘கனெக்ட்’ படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் கூறியதாவது…

‘இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை அனுபம் கெர் ஏற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம், அவர் எங்கள் திரைப்படத்தில் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது. அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்புடன், இயல்பாக பழகினார்.  மிகவும் எளிமையுடன் அவரது பாத்திரம் பற்றி விவாதித்து  அதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஒரு தமிழ் திரைப்படத்தில் இணைந்ததற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தமிழ்த் திரையுலகினரின் தரம் மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பை பாராட்டி மகிழ்ந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ்ப் படங்கள் குறித்த அவரது கருத்து மேலும் வலுவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் ” என்றார்.

Continue Reading

Cinema News

‘ரணம் ரத்தம் ரௌத்திரம்’ படத்தின்  ‘உயிரே…’  பாடல்  வெளியானது.

Published

on

By

தயாரிப்பாளர்கள் என் வி பிரசாத் மற்றும் தனய்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர் எனப்படும் ரணம் ரத்தம் ரௌத்திரம்’. இந்தப்படத்தில் நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவன், பாலிவுட் நடிகை அலியா பட், தமிழ் திரையுலக நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, மரகதமணி இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி ‘உயிரே..’ என தொடங்கும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக அப்படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி பேசுகையில்,”ஆர் ஆர் ஆர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கும் பின்னணியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் எமோஷனல் இருக்கும். இந்த எமோஷன் தான் படத்தின் உயிர் நாடி. படத்தின் இந்த குவி புள்ளிக்கு இசை அமைப்பாளர் மரகத மணி தன்னுடைய நுட்பமான இசை திறனால் இசை வடிவம் கொடுத்திருக்கிறார். அதற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி அற்புதமான வரிகளை எழுதி இருக்கிறார். இது ரசிகர்களை கவரும்” என்றார்.

ஆர் ஆர் ஆர் படத்தின் ஆன்மா என இயக்குனர் ராஜமவுலி கருதி வெளியிட்டிருக்கும் ‘உயிரே…’ பாடலை பார்வையிட்ட பார்வையாளர்கள் இந்த படம், தமிழில் ஏற்கனவே வெளியான ‘சிறைச்சாலை’ படத்தினை எதிரொலிப்பது போல் உள்ளதாக இணையத்தில் பின்னூட்டமிட்டு வருகிறார்கள். இருப்பினும் ‘பாகுபலி’ தந்த படைப்பாளி என்பதால் ராஜமௌலியின் கற்பனை, ரசிகர்களின் விழிகளை விரியச் செய்து வியப்பில் ஆழ்த்தும் என உறுதியாக எதிர்பார்ப்போம்.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.