இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”

‘கலைமாமணி’ பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல், கலை நயம் மற்றும் ஆத்மார்த்தமான இசைநேர்த்திக்காக பெரிதும் போற்றப்படுகிறார்.

மிகச் சிறந்த வயலின் இசை மேதையான பத்மபூஷன் ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன் அவர்களின் பிரத்யேக மாணவி. நேரடியாக அவரிடம் வயலின் கற்ற சிறப்புடையவர். இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள பத்மா, தற்போது ஷங்கர் மகாதேவன் அகாடமியில் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

இசை ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைத்து, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் முறையாக இசையை ரசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தூண்டும் வகையில் ஒரு டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி, ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளம் உதயமாகிறது. இத்தளத்திற்குள் பிரத்யேகமான சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் நீங்கள் பத்மாவின் சமீபத்திய இசை பதிவுகளை கேட்கலாம், அவர் தனது பிளாக்கில் எழுதுவதை படிக்கலாம், அவரது சிறப்பு இசை காணொளிகள் மற்றும் கச்சேரிகளை காணலாம், அவரது டிஜிட்டல் ஸ்டோரில் சந்தாதாரர்கள் சிறப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம். இவை அனைத்தும், வேறெந்த சமூக ஊடகங்களிலும் பொது தளங்களிலும் கிடைக்க பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.