Connect with us

Cinema News

என்னை தேர்ந்தெடுத்தால் VPF முற்றிலும் ஒழிக்கப்படும் – சிங்காரவேலன் தேர்தல் அறிக்கை!

Published

on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது.

இராமசாமி முரளி,T.ராஜேந்தர் தலைமைகளில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது இவர்கள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வாக்கு கேட்டு வந்தனர்.

இத்தேர்தலில் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் R.சிங்காரவடிவேலன் கடந்த இருவார காலமாக தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது…

தேர்தல் அறிக்கை விபரம்

1.மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திரைப்படத் தொழிலை Small  Scale Industries வரம்புக்குள் கொண்டு வரவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திரைப்பட தயாரிப்பிற்கென்று கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். 

2.கேபிள் டிவி மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும்.

3.சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குநர்களில் 10 நடிகர்கள் மற்றும் 10 இயக்குநர்களை கொண்டு  ” சுயம்வரம் ” பட பாணியில் இரண்டே நாட்களில் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்து அதனை வெற்றிகரமாக வியாபாரம் செய்து அதன் மூலம்  ரூ. 15 கோடி இலாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும்.

4.பிற மொழி டப்பிங் உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமங்களை சங்கத்தின் மூலம் விற்பனை செய்து, அதன் மூலம் பெறப்படும் கமிஷன் மூலம்  ரூ. 2 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும்.

5.உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களின் ஆடியோவை வெளியிடுவதற்கு வசதியாக சங்கத்தின் சார்பில் ஆடியோ கம்பெனி ஒன்று ஏற்படுத்தப்படும்.

6.சங்கத்திற்கென்று, பிரத்யேகமாக OTT தளம், YOUTUBE Channel  ஏற்படுத்தப்படும்.

7.சங்கத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி நிறுவனம் துவங்கப்படும். அனைத்து படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ் இந்த தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பப்படும். அனைத்து புதிய படங்களும்இந்ததொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு, உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

8.அனைத்து உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதைப்போல, ஆயுள் காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு உறுப்பினர் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்திவிட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

9.60 வயதுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மாதந்தோறும் ரூ.20000 உதவித் தொகையாக வழங்கப்படும். இது எதிர்வரும்               டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

10.60 வயதுக்கு கீழுள்ள தயாரிப்பாளர்களில் விருப்பப்படும் நபருக்கு மாதம் தோறும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும். எதிர்வரும் 01-01-2021 முதல் இது நடைமுறைக்கு வரும்.

11.உறுப்பினர்களின் குழந்தைகள் படிக்க கல்வி உதவித்தொகை சங்கத்தின் சார்பில் வழங்கப்படும். +2ல் அதிக மதிப்பெண் பெறும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் சங்கமே ஏற்றுக்கொள்ளும்.

12.திருமணமாகாத உறுப்பினர்களின் திருமணத்திற்கு ரூ. 2 இலட்சமும் உறுப்பினர்களின் வாரிசுகளின் திருமணத்திற்கு ரூ. 1 இலட்சமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படும்.

13. மூன்றுமாதங்களுக்கு ஒரு முறை சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.  நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ளும் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் சங்கத்தின் சார்பில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். உறுப்பினர்கள் விரும்புகின்ற இடத்தில் அந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

14.உறுப்பினர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் அவரது இறுதிச்சடங்கு மற்றும் செலவுகளுக்காகவும், அந்த குடும்பத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு உடனடியாக சங்கத்தின் சார்பில் ரூ 5 இலட்சம் வழங்கப்படும்.

15.வெளிவர இருக்கின்ற படங்களின் கேபிள் டிவி உரிமையை சங்கத்திற்கு வழங்கும் உறுப்பினர்களுக்கு ரூ. 1 இலட்சம் உரிமத் தொகை வழங்கப்படும்

16.உறுப்பினர்களின் பிறந்த நாள் சங்கத்தின் சார்பில் உறுப்பினரின் வீட்டில் கொண்டாடப்படும். இதற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.10,000 மதிப்புள்ள GIFT PACK வழங்கப்படும்.

17.பையனூரில் அரசு ஒதுக்கியுள்ள இடத்தில்  அரசாணைக்கு  கட்டுப்பட்டு சொசைட்டியின் ஒத்துழைப்போடு, சொசைட்டி விதிகளுக்குட்பட்டு  உறுப்பினர்களுக்கு தலா 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். 15 சதவீத தொகை, தோராயமாக ரூ.2,25,000 நமது சங்கம் மானியமாக வழங்கும். 85 சதவீத தொகை வங்கியில் கடன் பெற்றுத் தரப்படும். மாத தவணையாக ரூ.10,000 செலுத்துவது போல், வங்கியுடன் உடன்பாடு செய்யப்படும்.

18.வீடுகள் நான்கு ப்ளாக்குகளாக கட்டப்படும். PHASE I, II, III, IV என்று இருக்கும். ஒவ்வொரு ப்ளாக்கிலும் 250 வீடுகள் இருக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் தொடங்கப்படும்.

19.உறுப்பினர்களின் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பெண்களின் பிரசவ செலவுக்காக ரூ.50,000  முதல் ரூ. 1,00,000 வரை மருத்துவ செலவுக்காக வழங்கப்படும். இதற்காக வருட பட்ஜெட்டில் ரூ.50  லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

20.சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருப்பவர்கள் மாற்று தொழில் செய்ய முன்வந்தால் அதற்காக பயிற்சியளித்து வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

21.உறுப்பினர்களின் வெளியாகாத திரைப்படங்களை வெளியிட விநியோக  குழு  அமைக்கப்படும். இந்த குழு நேரடியாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொடுக்கும்.

22.அரசாங்கத்திடம் உரிய முறையில் பேசி தகுதியுள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அரசு மானியத்தை ரூ. 7 இலட்சத்தில் இருந்து உயர்த்தி ரூ.15 இலட்சம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

23.உறுப்பினர்களின் பழைய படங்களின் பாடல்கள் மற்றும் கிளிப்பிங்ஸ் வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து உரிய தொகை பெற்று தரப்படும்.

24.தயாரிப்பாளர்கள் Crowd Funding முறையில்  படம் தயாரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

25.இலாபத்தில் பங்கு ‘ என்ற முறையில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

26.VPF முற்றிலும் ஒழிக்கப்படும்.

27.செய்தித்தாள் விளம்பரத்திற்கு பதிலாக online விளம்பரங்கள் ஊக்கப்படுத்தப்படும். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் Twitter , facebook தளங்கள் உருவாக்கப்பட்டு இலவசமாக விளம்பரம் செய்ய வழிவகை செய்யப்படும்.

28.திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் அலைபேசி எண் சேகரிக்கப்பட்டு அவர்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சினிமா விளம்பரங்கள், ட்ரைலர்கள், அனுப்பி வைக்கப்படும். இதற்காக தமிழகம்  முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இதனால் டிவி, பேப்பர் Publicity செலவு குறையும்.

29.டிக்கெட் முன்பதிவிற்கென்று பிரத்யேக தளம் ஒன்று உருவாக்கப்படும். ஒரு புக்கிங் செய்வதற்கு ரூ.5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து படங்களையும் இந்த site மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

30.ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சியிலும் சங்கத்தின் வழிகாட்டலோடு, அரசின் ஒத்துழைப்போடு தமிழக அரசின் மினி திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

31.தயாரிப்பாளர்கள் எந்த ஊரில் இருந்து படம் பார்க்க விரும்பினாலும் அவருடைய அடையாள அட்டையை காட்டினால்  அவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்கள்    இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக திரையரங்க உரிமையாளர்களுடன் பேசி ஒப்பந்தம் செய்யப்படும்.

Advertisement

Cinema News

ரோபோட்ஸ்களுடன் சண்டை போட்ட நடிகர் ‘ஜெய்’

Published

on

By

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ்,  ஆகியோர் நடிக்கின்றனர்.

அதிக கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர்  ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை  மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர். சமீபத்தில்  நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க,  இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading

Cinema News

திரைப்பட விமர்சகர்கள், ரசிகர்கள் மனதை வென்ற ZEE5 யின் ‘விநோதய சித்தம்’ 

Published

on

By

Vinodhaya Sitham

ZEE5 ஓடிடி நிறுவனம் தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக  ZEE5 மாறியுள்ளது.

ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண:

https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673

பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர்  சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India  கூறியதாவது.

‘தரமான படங்களை தருவதே எங்கள்  ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு  அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம்   போன்ற எங்களது தளத்தில்  தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை   ரசிகர்கள்  விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான  கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்’.

சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,

‘எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில்  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன’.

நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது…

‘சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி’.

தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது

படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான,  ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் ‘விநோதய சித்தம்’  திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.

நீங்கள் முழுத்திரைப்படத்தை இந்த சுட்டியில் காணலாம்

: https://www.ZEE5.com/movies/details/vinodhaya-sitham/0-0-1z519672

Continue Reading

Cinema News

பரப்பரப்பை கிளப்பிய விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ போஸ்டர்!

Published

on

By

‘களவு’ என்ற படத்தினை தொடர்ந்து, இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கிவரும் படம், ‘மோகன்தாஸ்’. இந்தப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷாலின் பட நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ தயாரித்து வருகிறது.

விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கோடையில் ‘மோகன் தாஸ்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் விஷ்ணு விஷால் வில்லத்தனமான  சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த சுத்தியலுடன் மாகத்மா காந்தி காட்டிய கண்,காது,வாய் மூடியிருக்கும் மூன்று குரங்கு பொம்மைகளுடன் நாலாவதாக ஒரு குரங்கும் நூலால் கட்டப்பட்டுள்ளது. இதில் நான்காவது குரங்கு வீழ்த்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்தக்காட்சி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.