தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடிய கரு.பழனியப்பன்.

தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் ஜீ தமிழின், இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே தனி மரியாதை உண்டு. ஒவ்வொரு நிகழ்ச்சியுமே சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியின், இந் நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக,  மே 1 ஆம் தேதியான ‘உழைப்பாளர் தின’ த்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சரியாக நடத்துகிறதா சமூகம்?  என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தங்களுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு இருந்தவா்கள், ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி மூலம் பல நல்ல அனுபவங்களையும் துயரமான நிகழ்வுகளையும் பதிவு செய்தனர்.

இவா்களை கொளரவிக்க விரும்பிய  “தமிழா தமிழா”  அவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்தும், சன்மானங்கள் வழங்கி, பாராட்டியதோடு அவா்களுக்கு நல்ல விருந்தும் ஏற்பாடு செய்தது, குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.