டிரைவர் ஜமுனா – விமர்சனம்!

18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பி. சௌத்ரி தயாரித்து இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் டிரைவர் ஜமுனா. முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கால் டாக்சி கார் ஓட்டுநராக நடித்திருக்கிறார். அவருடன் ஆடுகளம் நரேன், ஶ்ரீரஞ்சனி, கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புதுமண தம்பதியை கொடூரமாக கொலை செய்யும் கூலிப்படை கும்பல், முன்னாள் எம்.எல்.ஏ-  ஆடுகளம் நரேனையும் கொலை செய்ய திட்டமிடுகிறது. இதற்காக கால் டாக்ஸி ஓட்டுனர்

ஐஸ்வர்யா ராஜேஷின் காரில் செல்கிறார்கள். இந்த சதி திட்டத்தை போலீஸ் முறியடிக்க ஐஸ்வர்யா ராஜேஷின் காரை பின் தொடர்கிறார்கள். கூலிப்படை கும்பலுக்கு இது தெரிய வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷை துப்பாக்கி முனையில் கொடுமை படுத்துகின்றனர். கூலிப்படையினர் திட்டமிட்டபடி ஆடுகளம் நரேனை கொலை செய்தார்களா? ஐஸ்வர்யா ராஜேஷின் நிலை என்னவானது. என்பது தான் யூகிக்க முடியாத டிரைவர் ஜமுனா படத்தின் சஸ்பென்ஸ் கதை.

கால் டாக்ஸி ஓட்டும் பெண்ணாக ஜமுனா  கதாபாத்திரத்தில், கச்சிதமாக நடித்திருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். க்ளைமாக்ஸில் அவரைப்பற்றி தெரிய வரும் போது அதிர்ச்சி! அவர் கார் ஓட்டும் ஸ்டைல் கதாபாத்திரத்தை வலுவாக்குகிறது.

எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கு ஆடுகளம் நரேன்,  ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக நடித்திருக்கும் ஶ்ரீரஞ்சனி ஆகியோர் தங்களது பக்குவாமான நடிப்பினால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஆடுகளம் நரேனின் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன் ராஜேஷ், ஐஸ்வர்யாவின் தம்பியாக நடித்திருக்கும் அபிஷேக், கூலிப்படையினராக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்த காட்சிகளுக்கு ஜிப்ரானின் பின்னணி இசை மெருகூட்டுகிறது. ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கான பலமாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஆடுகளம் நரேனையும் அவரது மகன் மணிகண்டன் ராஜேஷையும் கொலை செய்யும் காட்சிகள் திக்.. திக்.. நிமிடங்களாக இருக்கிறது.

அடுத்து நடக்கப்போவது என்ன? என்று யூகிக்க முடியாத வகையில் கதை, திரைக்கதை, எழுதி யிருக்கிறார் இயக்குநர் கிங்ஸ்லி. அதோடு எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் சிறப்பு!

Leave A Reply

Your email address will not be published.