ரவி கொட்டாரக்கரா தலைமையில் பதவியேற்ற பிலிம்சேம்பர் நிர்வாகிகள்!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி,
பொருளாளராக என்.இராமசாமி ( தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 செயற்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். தேர்தல் அதிகாரியாக சி.கல்யாண் பணியாற்றினார்.

பில்டிங் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத் ,ஜாகுவார் தங்கம், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.