‘அக்னி சிறகுகள்’ உலகதரத்தில் உருவாகியுள்ளது. – டி.சிவா!

Agni Siragugal

கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி தன்னுடைய உடலை மாற்றிக் கொள்ளும் அருண் விஜய், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இருவரும் இணைந்துள்ள படம் ‘அக்னி சிறகுகள்’.

அக்‌ஷரா ஹாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. புதிது புதிதான லொகேஷன்களில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது.

‘அக்னி சிறகுகள்’ படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து  கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும்  படமாக்கப்பட்டு வருகிறது.

கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும்  பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும்,  அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்து.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா படம் பற்றி கூறும்போது… ‘அக்னி சிறகுகள்’ படம் உருவாகி வந்திருக்கும் விதத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் நவீனின் அட்டகாச கதை சொல்லல் முறையும், அவரது குழு படத்தை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியுள்ளது.

மேலும் இப்படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு  முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை  உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும்’. என்றார்.