அருள்நிதி படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

பெங்களூரில் இருந்து  வந்திருக்கும் இந்த அழகான மற்றும் திறமையான நாயகி, எழுத்து மற்றும் மர்மத்துடன் நிபந்தனையற்ற தொடர்பில் உள்ளது போல் தெரிகிறது. இது அவரது முதல் படமான, மிகவும் பாராட்டுக்களை பெற்ற கன்னட ‘யு-டர்ன்’ படத்தில் தொடங்கி, பிளாக்பஸ்டர் ‘விக்ரம் வேதா’விலும் தொடர்ந்தது. யு-டர்ன் படத்தில் ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவளை சுற்றி சுழலும் மர்மம் நிறைய இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், விக்ரம் வேதாவிலும் மர்மங்கள் வெளிப்படும் ஒரு பாலமாக இருந்தார். அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத  இந்த படத்திலும் அதே போல ஒரு மர்மங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஆம், அவருடைய கதாபாத்திரம் மர்மமான ஒன்றாக இருக்கும், பார்வையாளர்கள் அவள் யார், அவளுடைய நோக்கம் என்ன என்று யோசிப்பார்கள். விக்ரம் வேதா மற்றும் யு-டர்ன் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களின் வரிசையில் இது சற்று ஒத்திருக்கிறது என்று ஆரம்பிக்கிறார் படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன். இவருடைய கதாபாத்திர படைப்பாலும், படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்வையாளர்கள் கண்களை இமைக்க கூட துணிய மாட்டார்கள் என்று அவர் தொடர்கிறார்.

இது குறித்து நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, “என்னை படத்தில் நடிக்க வைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. அது திடீரென்று நிகழ்ந்தது. ஸ்கிரிப்டை விவரிப்பதற்காக பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் ஸ்கிரிப்ட் கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார்  என்பதைப் பார்த்து மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று நான் கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் ட்ராமா வகையை சார்ந்தது.

டர்புகா சிவா இசையமைப்பாளராக ஒப்பந்தமாக, ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒரு பாராட்டத்தக்க நடிகை அருள்நிதி மற்றும் குழுவுடன் இணைவது நமக்கு என்ன மாதிரி ஒரு படம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. “இந்த படத்தில் ஸ்ரத்தாவை சேர்த்தது படத்துக்கு கூடுதலாக மதிப்பை கொடுத்திருக்கிறது. அவர் ஒரு பெரிய கலைஞர். இந்த ஸ்கிரிப்ட் ஒரு செயல்திறன் சார்ந்த சிறந்த கலைஞரைக் கோரியது, எங்கள் முதல் மற்றும் முன்னணி சாய்ஸ் ஸ்ரத்தா தான். அவரது தொழில் நேர்த்தி மற்றும் திறமை இந்த படத்திற்கு ஒரு பெரிய அந்தஸ்தை கொடுக்கும்” என்றார் எஸ்பி சினிமாஸ் சங்கர்.