இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட ‘தூங்கா நகரம்’

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த “இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்” நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய “தூங்கா நகரம்” திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.