ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு லதா ரஜினிகாந்த் மறுப்பு

சில அச்சு ஊடகங்கள் மற்றும் இனைய செய்தி தளங்களில் கடந்த  ஜூலை 3 ,2018 ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கோகாய் மற்றும் பானுமதி அவர்கள் அடங்கிய பெஞ்சில் நடைபெற்ற வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.M /S ஆட்பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களை எதிர்மனுதாரர் -1 ஆகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட விடுமுறைக்  கால சிறப்பு மனு மீதான விசாரணை அது.

வாதங்களின் போது கூறப்பட்டவைகளைச் செய்தியாக்கிய ஊடகங்கள் , அதற்க்கு முற்றிலும் மாறாக 3 ஜூலை 2018 ம் தேதிய நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் திருமதி .லதா ரஜினிகாந்த் அவர்களை பற்றி குறிப்பிட்டு இருப்பதை செய்தி நிறுவனங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை  .உச்சநீதிமன்றத்தின் ஆணையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ,” M / S மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி ,முதல் எதிர் மனுதாரரான திருமதி.லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது எதிர் மனுதாரரின் கருத்தினை கேட்காமல் பதிவு செய்ய பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை .எனவே 16 -4 -2018 தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது.இவற்றை கருத்தில் கொண்டு , அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விசயங்களில் உள்நுழைவதை விட ,மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது”

வழக்கு இறுதித்தீர்ப்புக்காக ஜூலை 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.இந்த நீதிமன்ற ஆணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த சரியான தகவலை பிரசுரிக்கும்படி செய்தி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறோம்.