கடும் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. அங்குள்ள 33 அணைகளில் 24 அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளதால் அந்த அணைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 6 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகளில் இருந்து  திறந்துவிடப்பட்டுள்ள வெள்ள நீர்  எர்ணாக்குளம், திருச்சூர் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கொச்சியில் ஏழூர், முப்பாத்தடம் ஆகிய பகுதிகள் கடும் வெள்ளத்தால் சூழப்பட்டு கொச்சி. விமான நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.  இதனால் விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டு வரும் 18ஆம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.