மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் நடை பயிற்சியின் போது அவர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
இன்றும் வழக்கம்போல் காலையில் ‘கோவை’ பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடை பயிற்சி மேற்கொண்டார்.
மக்கள் அவருடன் பேசவும், செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் அதிக அளவில் பொதுமக்கள் கூடினர்.
அப்போது சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் காலை சிலர் தவறுதலாக மிதித்து விட்டனர். இதனால் அவருக்கு காலில் வலி ஏற்பட்டது.
காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய பிரச்சார திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.