கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார் அஜித்குமார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சீராக இருந்து வருகிறது.  அகில இந்திய அளவில் அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தொலைபேசியிலும், நேரிலும் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இன்று காலை சுமார் 10.00 மணியளவில் நடிகர் விஜய் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்ஆகியோரிடம் நேரில் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று  இரவு 8.40 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.