‘திமுக., தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம்’ – மு.க.ஸ்டாலின்

இன்று காலை முதல் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த தவறான செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம்  பரப்பப்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில்  உடல் நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு  கண்டுபிடிக்கப்பட்டு , நுரையீரலில் உள்ள சளியை அகற்ற ‘ட்ரக்கியோஸ்டோமி ‘ கருவி பொருத்தப்பட்டது.

அதன் பிறகு 4 முறை  ‘ட்ரக்கியோஸ்டோமி ‘ கருவி மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னரும் இந்தக் கருவியை மாற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார், இந்நிலையில் கருணாநிதியின் இதயம் மட்டும் இயங்குவதாகவும் மற்ற உறுப்புகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் வதந்திகள் பரவியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுர இல்லத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய அவர் ‘தலைவர் உடல் நிலை குறித்து வரும் செய்திகளை நம்ப வேண்டாம். லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது கவலை படும்படியாக எதுவும் இல்லை என கூறினார்.’