காதல் கலந்த ஹாரர் படம் ‘நெஞ்சில் ஒரு ஓவியம்’

ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ நெஞ்சில் ஒரு ஓவியம் “.தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜாமணி ,இசை – ஸ்டீபன் ராயல், பாடல்கள் – இளையகம்பன், கவிகாற்கோ, நிலவநேசன், எடிட்டிங் – பாலா ,கலை இயக்குனர் – ஸ்ரீதர் ,ஸ்டன்ட் – தளபதிதினேஷ் ,நடனம் – பார்கவ் ,மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, வசனம் – சுகுணா கந்தசாமி ,தயாரிப்பு – K.ஜோதி பிள்ளை – சுகுணா கந்தசாமி, திரைக்கதை, இயக்கம் – K.ஜோதிபிள்ளை, சாமுவேல்ராஜ்.

படம் பற்றி இயக்குனர் K.ஜோதிபிள்ளை கூறியதாவது..

இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த, ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றிதான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெய்ண்டிங் துறையில் மிகபெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார். இடையில் காதலில் விழும் அவனுக்கு சில பிரச்னைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டான் அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்கையில் ஜெயித்தான் என்பதை ஹாரர், காதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம். ஹாரர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் K.ஜோதிபிள்ளை.