திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வாழ்த்து!

சென்னை காவேரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில்’ கருணாநிதியின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப பிரார்த்திபதாகவும்’ கூறப்பட்டுள்ளது.