பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.
திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்
திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.