தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கப் பணம் அபகரிப்பு? இயக்குனர் விசு, பிறைசூடன் உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார்!

திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாகசெயல் பட்டு வரும் ‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின்’ பணத்தை அபகரித்துவிட்டதாக அதன் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், டிரஸ்டி மதுமிதா உள்ளிட்டோர் மீது  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின்’ தற்போதைய தலைவர் பாக்யராஜ், பொருளாளர் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள்  இந்தப் புகாரை இன்று அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை  தொடங்கி சங்கத்தின் பணம் அனைத்தும் சுமார் 37 லட்சம் ரூபாயை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியதாகவும் இது குறித்து பேச அழைத்தபோது வரமறுத்ததாகவும் இதன் மூலம்  பணத்தை அபகரித்துவிட்டதாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.