தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம் “அழகு மகன்”.

இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அழகன் செல்வா.இவர் இயக்கும் முதல் படம் “அழகு மகன்”.

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார். இவர்களுடன்  இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி  நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம்.அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம்.  அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ் நிலையில் வாழ்பவர்கள்.

அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல். இதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம், தேனி, போடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3 ம் தேதி வெளியிடுகிறார் என்றார் இயக்குனர்.