தேசிய பளு தூக்கல் சாம்பியன் எஸ். லோகப்பிரியாவுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது

2018 ஜுலை 27 – மதுரையின் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, வளாகத்தில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் தேசிய பளு தூக்கல் போட்டியில் சாம்பியனாக பட்டம் பெற்ற செல்வி எஸ். லோகப்பிரியாவை பாராட்டி கௌரவித்தது. தென் ஆப்பிரிக்காவில் பாட்செஃப்ஸ்ட்ரூம் என்ற இடத்தில் நடைபெறவுள்ள சப்-ஜுனியர் மற்றும் ஜுனியர் உலக பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்லவிருக்கும் செல்வி எஸ். லோகப்பிரியா செலவுகளுக்காக ரூ.1,00,000 தொகையை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ துறை இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி இந்நிகழ்ச்சியின்போது அவருக்கு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தை சேர்ந்தவரான செல்வி. லோகப்பிரியா பிபிஏ பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். ஆந்திரபிரதேஷ், ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிகி வகையினத்தில் லோகப்பிரியா தங்க பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூம்-ல் செப்டம்பர் 2 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறவிருக்கிற 18வது உலக சப்-ஜுனியர் மற்றும் 36வது ஜுனியர் பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் இந்திய சப்-ஜுனியர் மற்றும் ஜுனியர் குழுவிற்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின், ஊக்கமளிக்கும் இந்த நிதியுதவிக்காக தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்திய செல்வி. லோகப்பிரியா, கூடியவிரைவில் நாட்டிற்காக இன்னும் அநேக பதக்கங்களையும், பெருமையையும் கொண்டு வருவேன் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை, குறித்து
www.mmhrc.in

மதுரையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) தொடங்கப்பட்டதிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவை அனைவருக்கும் கிடைக்குமாறு செய்துவருகிறது. ‘எந்தவொரு மனிதரும், முதல் தரமான மருத்துவ சிகிச்சையை பெற வசதியில்லாத ஏழையாக இல்லை.’ என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்ற இம்மருத்துவமனையின் குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் இதன் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 110 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தனது சேவையை தொடங்கிய இம்மருத்துவமனை, இன்றைக்கு தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பன்முக உயர் சிறப்பு உடல்நல பராமரிப்பு பெருமையமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

1,000 படுக்கை வசதிகள் மற்றும் 45 சிறப்புப்பிரிவுகளை கொண்டிருக்கும் இது, மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான மாவட்டங்களில் வசிக்கும் எண்ணற்ற நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் மருத்துவமனையாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொருநாளும் வருகைதரும் 1,500-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு தரமான சுகாதார சேவையை கட்டுப்படியாகக்கூடிய எளிய கட்டணத்தில் வழங்குவதற்கு மிக நவீன தொழில்நுட்பம், மருத்துவ நேர்த்தி நிலை மற்றும் கனிவோடு இந்திய விருந்தோம்பலின் பாரம்பரியத்தையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஒருங்கிணைத்து தனது செயல்பாட்டின் ஒரு அங்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையானது, அது வழங்கும் சேவைகளுள் ஒரு வலுவான அறநலக்கூறினை உள்ளடக்கி சேவையாற்றி வருகிறது. குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கு இலவச சிகிச்சையையும் மற்றும் மூக்கும் வாயும் இணைந்த நிலையிலுள்ள சிறார்களுக்கு இலவச அறுவைசிகிச்சையையும் இது வழங்குகிறது. தீராநோயுற்றோர் கவனிப்பு இல்லம் (Hospice) உடன் இணைக்கப்பட்டு இயங்குகின்ற இந்தியாவின் வெகுசில மருத்துவமனைகளுள் இதுவும் ஒன்றாகும். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பரவலாக பாராட்டும், வரவேற்பும் பெற்றிருக்கிற ஒரு தனிச்சிறப்பான டெலிமெடிசின் செயல்திட்டத்தையும் நடத்தி வருகிறது.