நமீதா – ராஜேந்தர் நடிக்கும் புதிய படம் ‘இன்றையக் காதல் டா..’

பல வெள்ளிவிழாப் படங்களை தயாரித்து இயக்கிய டி..ராஜேந்தர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை திரக்கதை எழுதி இயக்கும் படம் ‘இன்றையக் காதல் டா..’. சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில்  இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தில் கவர்ச்சி நடிகை நமீதா லேடி டானாக நடிக்கவுள்ளார். மேலும் டி.ராஜேந்தருடன் பல படங்களில் பணிபுரிந்த நடிகர்கள் பலர் நடிக்கவிருக்கிறனர்.

முழுக்க முழுக்க இளமை ரசம் சொட்டும் கதையாகவும் இன்றையக் காலக்கட்டத்திற்கேற்ற படமாகவும் இருக்கும் என்கிறார் டி.ராஜேந்தர். இந்த படத்திற்கு முன்னர்  கவர்ச்சி நடிகை மும்தாஜ் நடித்த ‘வீராசாமி’ படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடதக்கது.