நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலர் பணி இடை நீக்கம் – சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

சென்னை எழும்பூரில்  உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு வேப்பேரி காவல் நிலையத்தில் வேலை செய்யும் பெண் காவலர்  நந்தினி சீருடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளார். நீண்ட நேரமாக செல்போனில் பேசிய அவர் சில பொருட்களை எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் போட்டுள்ளார். இதைக்கவனித்த  கடையின் உரிமையாளர் பிரனாவ் பில் போடும் இடத்திற்கு வந்த பெண் காவலர் நந்தினியிடம் இது குறித்து கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அவர் திருடியபோது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் காட்டிய பிறகு   திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர்  தனது குற்றத்தை  ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நந்தினியின் கணவரும், மற்றும் சிலரும் கடை  உரிமையாளர் பிரனாவை தாக்கியுள்ளனர். . திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்  பெண் காவலர் நந்தினியை பணி இடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.