நெகிழவைத்த விழுப்புரம் சிறுமி அனுப்பிரியா

விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அனுப்பிரியா என்ற சிறுமி. தனியார் பள்ளியில் 2 – ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் தனக்கு ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 4 ஆண்டுகளாக  உண்டியல் மூலம் காசு சேமித்து வந்துள்ளார். வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளன்று சைக்கிள் வாங்க முடிவு செய்திருந்தார்.

கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவும் வகையில் சிறுக சிறுக  தன்னுடைய உண்டியல்களில் சேர்த்த 8,245 ரூபாயை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.

சிறுமி அனுப்பிரியாவின் செயலைக் கண்டு நெகிழ்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக மேலாளருமான பங்கஜ் .எம். முஞ்சல் சிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒவ்வொரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.

இந்த சிறுமியின் செயல்குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்