படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் வசந்த்…!

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா”. திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது..விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார்அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் முறிந்தது.உடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உடனடியாக சிகிச்சை அளிக்கப் பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னையில் சோதனை செய்யப் பட்டது.

அவரது காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டதை தொடர்ந்து வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் விஜய் வசந்த் இன்னும் மூன்று வாரத்திலே படத்தை முடித்து கொடுப்பதாக கூறியது ,அவர் கலைத்துறை மேல் உள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது .

இதுபற்றி படத்தின் இயக்குனர் ரஞ்சன் கூறும் போது,”படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சியை படமாக்கி கொண்டிருந்தபோது விஜய் வசந்துக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கிட்டத்தட்ட மூன்று வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் விஜய் வசந்தோ எப்படியும் உறுதியாக விரைவில் எழுந்து வந்துவிடுவேன் என தன்னம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அந்த அளவுக்கு படத்துடன் ஒன்றிவிட்டார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 98% சதவீதம் முடிந்துவிட்டது. அநேகமாக இன்னும் இரண்டு வாரத்திற்குள் படப்பிடிப்பை மீண்டும் துவங்கி முடித்துவிடுவோம் என நம்புகிறோம். படம் நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.