போதை பொருள் விற்கும் பெண்ணாக நயந்தாரா

நயந்தாரா நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. யோகி பாபு, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அன்மையில் வெளியான கல்யாண வயசு பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியிலிருக்கின்றனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக போதை பொருள் விற்கும் அபலை பெண்ணாக நடித்துள்ள நயந்தாராவிற்கு இந்தப்படம் முக்கியமான படமாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர். சென்சார் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்ற நயந்தாரா உற்சாகத்திலிருக்கிறாராம். படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.