மும்பை ஜுஹூ விமானத்தளத்தில் தரையிரங்க வேண்டிய சிறிய ரக விமானம் ஒன்று மும்பையின் காட்கோபர் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இன்று நண்பகல் நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான ஓட்டுனருடன் விமானத்தில் பயணம் செய்த விமானப் பராமரிப்பு பொறியாளர்களும், கட்டுமான வேலை செய்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து துரிதமாக செயல்பட்டனர். விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.