‘மோகினி’ பயமுறுத்துமா? கிச்சுக்கிச்சு மூட்டுமா?

மோகினி, வைஷ்ணவி என இரு கதாபாத்திரங்களில் நடிகை த்ரிஷா நடித்துள்ள படம்  ‘மோகினி’. நயந்தாராவைப் போல் வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். எப்படியும் கமர்ஷியல் ஹிட் கொடுத்து தன்னுடைய சக போட்டியாளரான நயந்தாராவிடம் தன் இருப்பை காட்டிக்கொள்வதற்காக படத்தில் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

‘மோகினி’ இது வழக்கமான  ஹாரர் படமாக இருந்தாலும் வித்தியாசமானதாக இருக்குமாம். அதே சமயத்தில் ஹாரர் படமாக இருந்தாலும் தொலைக்காட்சி தொடர்களைப் போல்  நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கிறதாம்.

‘மோகினி’ படத்தில் ‘எபி ஜெனெடிக்ஸ்’ என்ற கான்செப்ட்டை கையிலெடுத்துள்ள இயக்குனர் மாதேஷ். இப்படத்தின் vfx காட்சிகளை லண்டனில் உருவாக்கியுள்ளார்.  இப்படம் தமிழகத்தில் வெளியாகும் அன்றே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் வெளியாகுகிறது. சோட்டானிக்கரை கோவிலில் நடந்த உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் மாதேஷ்.

‘மோகினி’ இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகிறது.