ராகுல்காந்தி இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு!

எதிர் வரும் 2019 ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்த பாஜக-வின் தலைவர் அமித்ஷாவின்  மேடைப்பேச்சு ஒரு பரப்புரையாகவே பார்க்கப்பட்டு,  திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவசரமாக தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த உள்ளார்.

 

இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களால் பரப்பரப்பை ஏற்படுத்தி வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவரும் நடிகர் கலையரசனும் நேற்று  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.  டெல்லியில் நடந்த இந்ந்த சந்திப்பின் போது அரசியல், சினிமா உள்ளிட்ட விஷயங்களை பேசியுள்ளனர். இது குறித்து கருத்தினை பதிவு செய்த ராகுல் காந்தி பா.ரஞ்சித், கலையரசன் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 27 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை எனக்கூறியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாகியுள்ளது.