லக்‌ஷ்மி படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

பிரபுதேவாவின் ‘லக்‌ஷ்மி’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு வரம்பற்ற மகிழ்ச்சி எப்போது கிடைக்கும் என்றால் அவை உலகளாவிய பார்வையாளர்களுக்காக கிடைக்கும் போது தான். சென்சார் குழு உறுப்பினர்கள் லக்‌ஷ்மி படத்துக்கு ‘யு’ சான்றிதழை கொடுத்தது ‘லக்ஷ்மி’ குழுவுக்கு மகிழ்ச்சியைக் அளித்துள்ளது. மேலும், படத்திற்கு ஒரு வெட்டு கூட இல்லை என்பது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எந்த வகை படமாக இருந்தாலும் இயக்குனர் விஜய், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கத் தவறியதில்லை. இந்த சமகால சூழ்நிலையில் இது மிகவும் அரிது.  இதை இயக்குனர் விஜய் இந்த படத்தின் வெற்றியின் முதல் படியாக உணர்கிறார்.

 

திரைப்படத்தின் காட்சி விளம்பரங்களும், பாடல்களும் ஏற்கனவே அனைத்து வயதினரிடமும் அன்பையும், அரவணைப்பையும் பெற்றுள்ளன.

 

‘நடனம்’ மற்றும் ‘இசை’ ஆகியவை மொழி மற்றும் எல்லைகளை தாண்டி பார்வையாளர்களிடையே எப்போதும் ஒரு வலுவான இடத்தை பெற்றிருக்கின்றன. நிச்சயமாக, இவை ஒரு படத்தை இன்னும் உற்சாகமாக, மற்றும் சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. அது உணர்வுகளோடு கலந்த உள்ளடக்கத்தோடு வரும்போது இன்னும் கூடுதல் மதிப்பை பெறுகின்றன. அந்த வகையில், படக்குழு நம்புகிற மாதிரி, லக்‌ஷ்மி ஒவ்வொரு பார்வையாளரின்  இதயத்தையும்  வெல்லும் என்பது உறுதியாகிறது.

 

இந்தியாவின் மிகவும் கொண்டாடப்பட்ட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் குழந்தைகளின் விருப்பமான ஐகான் டித்யா பண்டே இருவரும் இந்த படத்தில் நடித்திருப்பது, எதிர்பார்ப்புகளை மிகவும் அதிகமாக்கி இருக்கின்றன. நடனத்தில் மிகவும் புகழ்பெற்ற, திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தில் நடித்திருப்பதும் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது என்பது நிதர்சனமான உண்மை.